மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கு!

பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு  ஊரடங்கு!

பிரதமரின் நிர்வாகத் தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு செல்கிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி, ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் போக்கு குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமார்சனங்களை வைத்து வருகிறார்.

இந்த நிலையில், தான் முழு ஊரடங்கை விரும்பவில்லை என்றும், மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கடந்த ஆண்டு திட்டமிடப்படாமல் நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது மக்கள் மீது நடத்தப்பட்ட அபாயகரமான தாக்குதலாகும். அதனால், மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். அதனால்தான், முழு ஊரடங்கு அமல்படுத்துவதை எதிர்க்கிறேன். ஆனால், பிரதமரின் தோல்வி மற்றும் மத்திய அரசின் செயல்பாடு இன்மை போன்றவற்றால் மீண்டும் நாடு முழு ஊரடங்கை நோக்கி செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு நிதியுதவி மற்றும் அனைத்துவித உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை விமர்சித்த ராகுல் காந்தி, "தேர்தல் முடிந்தது, தாக்குதல், கொள்ளை போன்றவை மீண்டும் தொடங்கியது” என்று ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான், 'கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு’ என ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 7 மே 2021