மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ஸ்டாலின் அமைச்சரவை: புறக்கணிக்கப்பட்ட கலைஞர் மண்!

ஸ்டாலின் அமைச்சரவை: புறக்கணிக்கப்பட்ட  கலைஞர் மண்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 7) காலை 9 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய நிகழ்வில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்கிறார்.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆளுநர் அலுவலகம், ஸ்டாலின் தலைமையில் பதவியேற்க இருக்கும் 34 அமைச்சர்களின் பட்டியலை இன்று (மே 6) வெளியிட்டிருக்கிறது.

முதலில் அந்த பட்டியலைப் பார்ப்போம்:

துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை

கே.என்.நேரு: நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி, குடிநீர் வழங்கல்

ஐ பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்

எ..வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி - கைத்தறித்துறை அமைச்சர்

மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி - வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

சா.மு.நாசர் - பால் வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்

மேற்கண்ட அமைச்சரவைப் பட்டியல் தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்து பகுதிகளையும் பிரநிதிதித்துவப்படுத்துகிறதா என்ற சர்ச்சை திமுக கட்சிக்குள்ளும் வெளியேயும் எழுந்திருக்கிறது,

குறிப்பாக அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்த டெல்டா திமுகவினரும்,காவேரி டெல்டா மக்களும் தங்கள் பகுதி ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குமுறுகிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எப்படி திமுக கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்ததோ அதேபோல டெல்டாவும் திமுகவுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அள்ளிக் கொடுத்தன.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதிய மாவட்டமான மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் 3 ல் மட்டுமே அதிமுக கூட்டணி ஜெயிக்க, மீதி 15 தொகுதிகளையும் திமுக கூட்டணியே வென்றது.

குறிப்பாக தஞ்சையில் எட்டு தொகுதிகளில் ஏழு, நாகையில் 3 தொகுதிகளில் 2, திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 3, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 3 என்று திமுக கூட்டணியே வென்றது. அதுவும் திமுகவுக்கு கடந்த தேர்தல் வரை முதல்வரையே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கலைஞரின் திருவாரூர் தொகுதி டெல்டா மண்டலத்தில்தான் இருக்கிறது. டெல்டா என்ற அடிப்படையில் கூட வேண்டாம், கலைஞர் பிறந்த மண் என்ற அடிப்படையிலாவது இந்த பூமிக்குரிய அரசியல் அதிகார பிரதிநிதித்துவத்தை அளித்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே சமூக தளங்களில் பேசுகிறார்கள் டெல்டா திமுகவினர்.

திருவாரூரின் பூண்டி கலைவாணன், மன்னார்குடியின் டி.ஆர்.பி. ராஜா என்று அமைச்சரவையில் எதிர்பார்க்கப்பட்ட தலைகள் யாரையும் காணவில்லை.

டெல்டா என்றால் இந்தப் பக்கம் திருச்சி, இந்தப் பக்கம் கடலூர், இந்தப் பக்கம் அரியலூர் ஆகியவற்றை எல்லையாக வகுத்து அங்கெல்லாம் அமைச்சர்களை கொடுத்த ஸ்டாலின் காவேரி டெல்டாவின் கருவை மறந்துவிட்டாரே என்கிறார்கள் கீழத் தஞ்சை திமுகவினர்.

-வேந்தன்

..

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 6 மே 2021