மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

கவர்னரிடம் போன அமைச்சரவை பட்டியல்!

கவர்னரிடம் போன அமைச்சரவை பட்டியல்!

தமிழக ஆளுநர் மாளிகையில் நாளை (மே 7), முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் திமுக வேட்பாளர்களும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து திமுகவின் பலம் 133ஆக உள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மு.க ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி நாளை காலை 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதனிடையே, திமுக அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று, பட்டியலும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நீர் பாசனம், திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவுக்கு உள்ளாட்சி துறை, பொன்முடிக்கு உயர் கல்வித்துறை, வேலுவுக்கு பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத்துறை என அமைச்சரவை பட்டியல் நீள்கிறது.

விரைவில் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 6 மே 2021