மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் உத்தரவு!

மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் உத்தரவு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2006இல் திமுக ஆட்சியில், கலைஞர் முதல்வராக இருந்தபோது, மதுரையில் வசித்துவரும் அவரது மூத்த மகன் மு.க.அழகிரிக்கு, பாதுகாப்பு அதிகாரியாக ஸ்டாலின் என்ற எஸ்.ஐ நியமிக்கப்பட்டார். வாகன வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. 2009இல் அவர், மத்திய அமைச்சரான பிறகு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் 2021இல் திமுக, ஆட்சியை அமைத்து நாளை (மே 7) முதல்வராகப் பதவியேற்கப் போகிறார் மு.க ஸ்டாலின். இந்நிலையில் நேற்று (மே 5) ஸ்டாலின் தரப்பிலிருந்து, ‘மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவருக்கு பிஎஸ்ஒ (போலீஸ் செக்யூரிட்டி ஆஃபிசர்) ஒருவரை போடுங்கள், அவர் கேட்கும் அதிகாரியைப் போடுங்கள்’ என்று போலீஸ் மூத்த அதிகாரி ஒருவருக்கு வாய்மொழி உத்தரவு சென்றிருக்கிறது.

இந்த தகவல் உடனே மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு சென்றதும், அவர் அழகிரியைத் தொடர்புகொண்டு பாதுகாப்பு கொடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். இதற்கு அழகிரி, தம்பி பதவியேற்கட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

தற்போது அழகிரி வீட்டுப்பக்கம் அதிகாரிகளின் அலைவீசுகிறது என்கிறார்கள் மதுரை மக்கள்.

-வணங்காமுடி

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 6 மே 2021