மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகள்!

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகள்!

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை புகார் வந்து கொண்டிருக்கிறது. தொற்று அதிகரித்துவரும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக ஆக்சிஜன் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

தனியார் பள்ளி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றப்பட்டு, அதில் ஒரே நேரத்தில் 6 முதல் 7 பேருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நேற்று (மே 5) முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சென்னையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கிறபோது, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருந்தால், அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இந்த வாகனத்தில் வைத்து ஆக்சிஜன் கொடுக்கப்படும். பின்பு மருத்துவமனையில் உள்ள படுக்கைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள்.

இந்த சேவையின் முதற்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் வாயில்களிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 6 மே 2021