கொரோனா தடுப்புப் பணி: ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

politics

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

இன்று (மே 6) முதல் மே 20ஆம் தேதி வரை, அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கண்காணிக்க ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் அளவிலான அதிகாரிகளை, கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்டலம், டீம்-1 (சென்னை நகரம்) –  எச்.எம்.ஜெயராம், ஐஜி ,  டீம்-2 (திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு)  – சாரங்கன் ஐஜி, காவல் பயிற்சி சென்னை.

வேலூர் மண்டலம் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை) – வனிதா ஐஜி, ரயில்வே சென்னை.

விழுப்புரம் மண்டலம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி) – எம்.பாண்டியன், விழுப்புரம் சரக டிஐஜி.

சேலம் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்) – தினகரன், ஐஜி – காத்திருப்போர் பட்டியல்.

கோவை மண்டலம் ( திருப்பூர், கோவை ஈரோடு, நீலகிரி) சஞ்சய் குமார், ஐஜி – தொழில்நுட்பப்பிரிவு.

திருச்சி மண்டலம் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்) – அம்ரேஷ் புஜாரி, ஏடிஜிபி – தொழில் நுட்பப்பிரிவு.

தஞ்சாவூர் (தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) – ஜெ.லோகநாதன் ஐஜி, காத்திருப்போர் பட்டியல்.

மதுரை (மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை) – சைலேஷ்குமார் யாதவ், ஏடிஜிபி – சமூக நலன் மற்றும் மனித உரிமை.

நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி) – முருகன், ஐஜி – நவீனமயமாக்கல் பிரிவு,  ஆகிய 9 ஐபிஎஸ் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிப்பார்கள் எனத் தமிழக அரசுத்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *