மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

இனி காலை 4 மணி நேரம் மட்டுமே!

இனி காலை 4 மணி நேரம் மட்டுமே!

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (மே 6) புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்காதது குறித்து கேள்வி எழுந்தது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இதுவரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு கொண்டிருந்த டாஸ்மாக் கடைகள், இன்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில், நேற்று (மே 5) எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது விற்பனைக்கு இன்னும் ஏன் அனுமதி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக 18 மணி நேரம் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள ஆந்திராவிலும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது.

வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 6 மே 2021