மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம்!

மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் , நாளை முதல் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் வேலைக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் மட்டும்தான் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவிகித்தினர் மட்டும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். சுழற்சி முறையில் பணிக்கு வரும் ஊழியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வர வேண்டும். குரூப் ஏ அலுவலர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரும் தினமும் பணிக்கு வர வேண்டும் .

வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வேண்டும். வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள், தங்கள் பணி புரியும் மாவட்டத்தில் இருந்து பணியாற்றுகிறார்களா என அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். ஊழியர்கள் அனுமதியின்றி, வெளிமாவட்டத்திற்கு செல்லக் கூடாது. அதேசமயம், மாற்றுத்திறனாளிகள் மே 20ஆம் தேதி வரை அலுவலகம் வர தேவையில்லை. நாளை முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, மே 20ஆம் வரை நடைமுறையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

புதன் 5 மே 2021