மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

மின்சார ரயில்களில் மக்களுக்கு அனுமதி இல்லை!

மின்சார ரயில்களில் மக்களுக்கு அனுமதி இல்லை!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல், அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்கள், மளிகை,தேநீர் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை மதியம் 12 வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இதையொட்டி, சென்னை மாநகர பேருந்துகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் இன்று அறிவித்தது.

தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை முதல் வருகிற 20ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகத் துறையினர், கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். இதனால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களின் வழியாகச் செல்லும் ரயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: ஆளுநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: ஆளுநர் எச்சரிக்கை!

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்! ...

4 நிமிட வாசிப்பு

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்!

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா? ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா?

புதன் 5 மே 2021