மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை அனுமதிப்பது ஏன்?

எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை அனுமதிப்பது ஏன்?

உடலில் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபான விற்பனைக்கு ஏன் இன்னும் அனுமதி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அதில், “கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில்,, டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மே 5) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, கொரோனாவிலிருந்து தப்பித்துக் கொள்ள உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிற நிலையில், உடலில் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவிற்பனைக்கு மட்டும் ஏன் இன்னும் அனுமதி அளிக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வினிதா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

புதன் 5 மே 2021