மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா?

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக் கணக்கில் பாதிப்பு, ஆயிரக்கணக்கில் இறப்பு ஏற்படுவதால் மருத்துவ வட்டாரங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்நிலையில், முழு ஊரடங்கை பல்வேறு மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக் கூடாது என மே 6ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள கர்நாடகாவில் மே 12 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நாளை முதல் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (மே 5) தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது.

நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும். குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கவேண்டும் ” என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இந்த சூழலில், தமிழகத்தில் மே 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ள நிலையில், அதன்பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 5 மே 2021