மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

ஆக்சிஜன் உற்பத்தி எப்போது?: ஸ்டெர்லைட்டில் ஆய்வு!

ஆக்சிஜன் உற்பத்தி எப்போது?: ஸ்டெர்லைட்டில் ஆய்வு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும், உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (மே 5) வழக்கு விசாரணை ஒன்றில், ”ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசு தரப்பில், ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது குறித்து நாளை விளக்கமளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், வேதியியல் துறையின் உதவி பேராசிரியர் கனகவேல், தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் உள்ளிட்ட 9 பேர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வை தொடர்ந்து ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 5 மே 2021