மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

மராத்தி இட ஒதுக்கீடு தீர்ப்பு: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்துமா?

மராத்தி இட ஒதுக்கீடு தீர்ப்பு: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்துமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமுதாய மக்களுக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து மாநில அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று (மே5) ரத்து செய்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக ஆட்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தி பிரிவினருக்கு 16%இட இதுக்கீடு அளித்து சட்டம் கொண்டு வந்தார். அம்மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட கடுமையான போராட்டங்களையடுத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று (மே 5) தீர்ப்பளித்தது.

அதில், “மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின் படி, சமூக பொருளாதார பின் தங்கிய பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது. மாநில அரசுகள் அடையாளம் கண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுதும் இந்தத் தீர்ப்பு விவாதமாகியுள்ள நிலையில் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் வன்னியர் சமுதாயத்துக்கு அளிக்கப்பட்ட 10.5 % உள் ஒதுக்கீட்டு சட்டத்துக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி சட்டமன்றத் தொடரில் பிப்ரவரி 26 ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றப்பட்டது. இது தேர்தல் களத்தில் சர்ச்சையானது. அதிமுகவிலேயே அமைச்சர்கள் உதயகுமார், துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இந்த சட்டம் தற்காலிகமானதுதான் என்று தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தனர். இதற்கு டாக்டர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட 16% இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் வன்னியர் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட 10.5 இட ஒதுக்கீட்டின் நிலை பற்றிய கேள்விகளும் முளைத்துள்ளன.

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த அதிமுக இப்போது ஆட்சியில் இல்லை. அதேநேரம், பாமக இந்த உள் ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு முன்பே விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போதே திமுக தலைவர் ஸ்டாலின், ‘வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு’என்ற வாக்குறுதியை அளித்தார். இப்போது திமுக ஆளுங்கட்சியாகிவிட்ட நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-வேந்தன்

மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: ஆளுநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: ஆளுநர் எச்சரிக்கை!

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்! ...

4 நிமிட வாசிப்பு

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்!

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா? ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா?

புதன் 5 மே 2021