மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

வங்கத்தில் ஹாட்ரிக் அடித்த மம்தா

வங்கத்தில் ஹாட்ரிக் அடித்த மம்தா

மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி இன்று (மே 5) காலை முதல்வராக பதவியேற்றார்.

மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு சவால்களைத் தாண்டி 292 தொகுதிகளில் 213 தொகுதிகளை கைப்பற்றி மேற்குவங்கத்தை மீண்டும் தன்வசமாக்கிக் கொண்டது திரிணமூல் காங்கிரஸ்.

மம்தா பானர்ஜியின் கட்சி வென்றாலும், அவர் நந்திகிராமில் போட்டியிட்டு சுவேந்து அதிகாரியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால், முதல்வராக பொறுப்பேற்க எந்தத் தடையும் இல்லை. இருப்பினும் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றே ஆக வேண்டும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைத்தபோது , சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலேயே மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். சில மாதங்கள் கழித்து, போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் இன்று(மே 5) காலை 10.45 மணிக்கு மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர், மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

”மூன்றாவது முறையாக பதவியேற்கும் மம்தா பானர்ஜியை நான் வாழ்த்துகிறேன். சமூகத்தை பெருமளவில் பாதித்துள்ள இந்த விவேகமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலில் அதற்கே முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மம்தா எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என ஆளுநர் ஜெகதீப் தங்கர் கூறினார்.

இதையடுத்து பேசிய மம்தா பானர்ஜி, ”கொரோனாவை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 5 மே 2021