மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

விஜய் வசந்தை வாழ்த்திய குஷ்பூ

விஜய் வசந்தை வாழ்த்திய       குஷ்பூ

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக- அதிமுக இடையே பரஸ்பர உறவுகளும், வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறைகளும் வழக்கொழிந்து போனது.

ஜெயலலிதா மறையும் வரை இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின் எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றத்தில் பார்த்து சிரித்தார், அவரது வாகனத்துக்கு வழிவிட்டார் என்ற குற்றசாட்டு ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீது சுமத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் வன்மத்தின் வாரிசாக எஞ்சி இருந்த சசிகலா, இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றாக எடப்பாடி கே.பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு, சிறைக்கு போனார். கட்சியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார் எடப்பாடி ,அதன் பின்னர் திமுக-அதிமுகவினரிடையே வெளிப்படையாக பரஸ்பர நலம் விசாரிப்பு, வாழ்த்து கூறும் நாகரிக கலாச்சாரம் அரும்ப தொடங்கியது.

அதன் உச்சம் கலைஞர் கருணாநிதி உடல் நலம் இன்றி இருந்தபோது அதிமுக தலைவர்கள் நலம் விசாரிக்க வீட்டுக்கு சென்றார்கள். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றார்கள். இது போன்ற நிகழ்வு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், அவரது மறைவின்போதும் திமுகவினரால் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதியானவுடன், எந்த தயக்கமும் இன்றி எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு உடனடியாக நன்றி தெரிவித்து உங்கள் ஆலோசனையும், ஆதரவும் வேண்டும், எதிர்கட்சி இணைந்து செயல்படுவதே ஜனநாயகம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டார்.

இது தமிழக அரசியலில் ஆரோக்கியமான போக்காக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது .அது இன்றைய இளம் தலைமுறை அரசியல்வாதிகளிடமும் அரும்ப தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது , எந்த தயக்கமும் இன்றி விஜய் வசந்த் பொன்.ராதாகிருஷ்ணனை வணங்கி வாழ்த்து பெற்றதும், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டதும் பரபரப்பானது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பாஜகவில் இணைந்தார்.

இருந்தாலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜய் வசந்திற்கு “வாழ்த்துக்கள் தம்பி” என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் வாழ்த்துக்கு, “மிக்க நன்றி சகோதரி” என விஜய் வசந்த் பதிலளித்துள்ளார்.

மேலும், திரையுலகத்தைச் சேர்ந்த கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சரத்குமார், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணுவிஷால், சிபி சத்யராஜ், மஞ்சு மனோஜ், சதீஷ், கிருஷ்ணா, மாஸ்டர் மகேந்திரன், மனோபாலா, சாந்தனு, மகத், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மோகன்ராஜா, அறிவழகன், மாரி செல்வராஜ், அகமது உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

-ராமானுஜம்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 5 மே 2021