மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

ஹைதராபாத்: முதல் முறையாக எட்டு சிங்கங்களுக்கு கொரோனா!

ஹைதராபாத்: முதல் முறையாக எட்டு சிங்கங்களுக்கு கொரோனா!

ஹைதராபாத்தின் ஜவஹர்லால் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு சிங்கங்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மனித இனங்களை அழித்துக்கொண்டு வருகின்ற வேளையில், தற்போது அது விலங்குகளையும் தாக்க ஆரம்பித்துள்ளது. இந்த எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாது.

ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள நான்கு ஆண் சிங்கங்களுக்கும், நான்கு பெண் சிங்கங்களுக்கும் காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்ததைக் கண்டுபிடித்த பூங்கா அதிகாரிகள், சிங்கங்களின் எச்சில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள சிசிஎம்பி (CCMB)க்கு அனுப்பினர். அதில், சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சிசிஎம்பி இயக்குநர் ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், “சிங்கங்கள் குணமடைந்து வருகின்றன. சரியான முறையில் உணவு உட்கொள்கின்றன. சிகிச்சைக்கும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றன. சிங்கங்களுக்கு உணவளிக்கும்போது, பராமரிப்பு பணியின்போதும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் பூங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனிதர்களிடமிருந்து விலங்களுக்கு வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை. விலங்குகளின் மலம் மாதிரிகளை சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. விலங்குகளின் மலம் மாதிரிகளை பரிசோதிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு முறையும் விலங்குகளிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகளைச் சேகரிக்க முடியாததால் இந்த முறை எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இங்கு வேலை செய்யும் பூங்கா ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அந்த எட்டு சிங்கங்களும், ஆசிய சிங்கங்கள் எனவும், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கங்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று எந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாலும் ஏற்படவில்லை. மனிதர்கள் மூலமும் பரவியிருக்க எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே மிருகக்காட்சி சாலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பாதுகாப்பு கருதி அந்தப் பூங்கா மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்களில் பல விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று பரவியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 5 மே 2021