மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

ஒருநாள் பாதிப்பு 21 ஆயிரத்தைத் தாண்டியது!

ஒருநாள் பாதிப்பு 21 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று(மே 4) ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 89 பேர், தனியார் மருத்துவமனையில் 48 பேர் என 144 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது

சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 19,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மொத்த எண்ணிக்கை 11,09,450 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,40,512 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 1,25,230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 12,450 பேர் ஆண்கள், 8,778 பெண்கள் ஆவர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 6,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 3,58,573 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக இருந்து வந்தது. தற்போது கொரோனா இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதுபோன்று கொரோனாவால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வினிதா

ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்

5 நிமிட வாசிப்பு

ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்

துரைமுருகன் துறை மாறிய மர்மம்!

4 நிமிட வாசிப்பு

துரைமுருகன் துறை மாறிய மர்மம்!

டெல்டாவுக்கு வாய்த்த கொறடா: அமைச்சர்கள் மறுக்கப்பட்டது ஏன்? ...

8 நிமிட வாசிப்பு

டெல்டாவுக்கு வாய்த்த கொறடா:  அமைச்சர்கள் மறுக்கப்பட்டது ஏன்?

செவ்வாய் 4 மே 2021