மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

கொரோனா : அரசின் இரு கொள்கைகள்!

கொரோனா : அரசின் இரு கொள்கைகள்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்புமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதையடுத்து, மே 6ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியானது . இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று நடந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ஐஏஎஸ் அதிகாரிகள் முருகானந்தம், உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் மட்டுமே நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், இதனை அனைத்து துறைகளும் சிறப்பாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நோய் தொற்று பரவலைத் தடுக்கவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் நாட்களில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதை கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இதை உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மே 6ஆம் தேதியிலிருந்து புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகவுள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்துவது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.

நோய் பரவாமல் தடுத்தல், தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் என கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வினிதா

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

செவ்வாய் 4 மே 2021