மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு!

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு!

தமிழகத்தில் மின் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மின்சார வாரிய ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒப்பந்த முறையில் பணியாற்றிய 1,212 செவிலியர்களுக்கு நாளையோடு பணி முடியும் நிலையில், இன்று பணி நிரந்தரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

3 நிமிட வாசிப்பு

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

ராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்: நடந்தது என்ன?

10 நிமிட வாசிப்பு

ராமதாஸுக்கு போன் போட்ட  முதல்வர்  ஸ்டாலின்: நடந்தது என்ன?

இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!

3 நிமிட வாசிப்பு

இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!

செவ்வாய் 4 மே 2021