மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெறும் நிலை!

நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெறும் நிலை!

சேலம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டி சென்றுள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்து, மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 600 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இன்றைய தினம் மேலும் 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்ட நிலையில் அவை அனைத்தும் உடனடியாக நிரம்பிவிட்டதாக மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்துள்ளார். படுக்கை வசதி பற்றாக்குறையினால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லை. வருகின்ற நோயாளிகள் அனைவருமே ஆக்சிஜன் தேவைப்படுபவர்களாக இருப்பதால் சூழல் இன்னும் கடினமாக இருக்கிறது. இதனால் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வினிதா

பன்னீர் டெல்லி பயணம்: அஜெண்டா சசிகலா

4 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி பயணம்:  அஜெண்டா சசிகலா

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

16 நிமிட வாசிப்பு

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

செவ்வாய் 4 மே 2021