மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

முதல்வர் ஸ்டாலின் எப்படி இருக்கிறார்? சந்தித்தவர்களின் அனுபவம்!

முதல்வர் ஸ்டாலின் எப்படி இருக்கிறார்?  சந்தித்தவர்களின்  அனுபவம்!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும் திமுக மட்டும் 125 இடங்களிலும் வெற்றிபெற்று வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிகாரபூர்வமாக இன்னமும் முதல்வர் பொறுப்பேற்காத நிலையிலும், கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள், மருந்துகள், முன் களப் பணியாளர்கள் என ஸ்டாலினுடன் ஆலோசித்து அவரது அறிவுரைகளின் படியே உத்தரவுகளை வெளியிடுகிறது தமிழக அரசு.

ஸ்டாலின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“வாழ்த்து தெரிவிப்பதற்காக ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முக்கிய உயர் அதிகாரிகளை புன்னகையுடன் வரவேற்று நலம் விசாரித்தார் ஸ்டாலின். தலைமைச் செயலாளர், வாழ்த்து தெரிவித்துவிட்டு, பதவியேற்பு விழாவைப் பற்றி பேச, ‘பதவியேற்பது பிறகு இருக்கட்டும். முதலில் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கணும் சார். அதைப்பற்றி பேசுவோம். மாலையில் ஹெல்த் செகரட்டரியுடன் வாருங்கள். எந்த டிஸ்டர்பும் இல்லாமல் சிறப்பாக பணியை தொடருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

பிறகு சுகாதாரத்துறை செயலாளருடன் தலைமைச் செயலாளர் சென்றபோதும், ஊரடங்கு பற்றிய மக்களின் பல்வேறு கஷ்டங்களை எடுத்துரைத்துள்ளார் ஸ்டாலின்.

அதிகாரிகள் சந்திப்பு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஸ்டாலினை திமுக நிர்வாகிகளும் வெற்றிபெற்றவர்களும் சந்தித்தார்கள். அவர்களிடம் விசாரித்ததில்,

“தேர்தலுக்கு முன்பு வரையில் தலைவரை சந்திக்கும்போது அவரது அறையில் பெரும்பாலான நேரங்களில் துரைமுருகன் போன்ற சீனியர்கள் சிலர் இருப்பார்கள். அதனால் தலைவரிடம் மனம் விட்டுப் பேசமுடியாது. ஆனால், நேற்றும் நேற்று முன்தினமும் தலைவர் தனியாகத்தான் இருந்தார். ஒவ்வொருவராகச் சந்தித்தார்.

தொகுதி நிலவரங்களையும் வெற்றிபெற்ற வாக்கு வித்தியாசங்களையும் கேட்டுக்கொண்டார். வித்தியாசம் குறைவாக இருந்தால் ஆறுதலாக சில வார்த்தைகளை சொல்லி பாத்துக்கலாம் வாங்க என்று கூறினார். வித்தியாசம் அதிகமாக இருந்தால் வாழ்த்துகள் தெரிவித்தார். சிலரிடம் வாக்கு குறைவுக்கும் தோல்விக்கும் காரணம் கேட்டபோது, மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளடி வேலை செய்ததாக முதல் நாளே புகாரை தொடங்கிவிட்டனர். தலைவர் முன்பு அதிகமாகப் பேசுவார் இப்போது அதிகமாக பேசுவதில்லை. சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு சில வார்த்தைகளே பேசுகிறார்”என்கிறார்கள்.

-வணங்காமுடி

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 4 மே 2021