மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு : ராகுல் காந்தி

முழு ஊரடங்கு ஒன்றே  தீர்வு : ராகுல் காந்தி

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பரவி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாநிலங்களில் பரவலின் தன்மைகேற்ப பகுதி நேர ஊரடங்கு, இரவுநேரம் மற்றும் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்துவது தற்போது அவசியமாக உள்ளது என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. இப்படி ஒவ்வொரு தரப்பினருமே ஊரடங்குதான் இதற்கு தீர்வு என்று சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில், “கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு செயல்படாமல் இருப்பதால், பல அப்பாவி மக்களின் உயிர் பறி போகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சத்துக்கு அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,449 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 4 மே 2021