மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்!

ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்!

கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கி தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்தாண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தபோது, மருத்துவர் உள்பட பெரும்பாலோனார் தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இதனால், நிலைமையை சமாளிப்பதற்காக கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் 1,212 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

நாளையுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்த செவிலியர்கள் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும். வருகிற மே 10 ஆம் தேதிக்கு முன்னதாக 1,212 செவிலியர்களும் சென்னையில் பணியில் சேர வேண்டும். கொரோனா பரவல் குறைந்த பின்னர், அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

பன்னீர் டெல்லி பயணம்: அஜெண்டா சசிகலா

4 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி பயணம்:  அஜெண்டா சசிகலா

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

16 நிமிட வாசிப்பு

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

செவ்வாய் 4 மே 2021