மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

புதிய அரசு……காலியாகும் தலைமை செயலகம்!

புதிய அரசு……காலியாகும் தலைமை செயலகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில் இருந்து அதிமுக அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு வருகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் வருகிற மே 7ஆம் தேதி பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்காக பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர். அதேசமயம் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுகவில் இருந்த 27 அமைச்சர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது புதிய முதல்வர் பதவியேற்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறைகள் காலி செய்யப்பட்டு வருகின்றது. அமைச்சர்களின் அறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் வாசலில் இடம் பெற்றிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களும் அழிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்களின் அறைகளில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் படங்களும் அப்புறப்படுத்தப்பட்டது. அத்துடன் அமைச்சர்களின் அறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. புதிதாக பதவியேற்கும் அரசின் அமைச்சர்களுக்கு இடமளிக்கும் விதமாக தலைமை செயலகத்தில் சுத்தப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

வினிதா

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

5 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

7 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

7 நிமிட வாசிப்பு

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

திங்கள் 3 மே 2021