மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

மம்தா பானர்ஜி மே 5ல் முதல்வராக பதவியேற்பு!

மம்தா பானர்ஜி மே 5ல் முதல்வராக பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி மே 5ஆம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

சட்டபேரவைத் தொகுதியில் தோல்வி அடைந்தாலும், முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்கிறார். அதாவது, அரசியல் சாசன சட்டம் 146 உட்பிரிவின் 4-ன் கீழ் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதம் பதவியில் இருக்க முடியும்.

அதன் பிறகு அவர் இடைத்தேர்தல் அல்லது நேரடி தேர்தலை சந்தித்து அவர் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராகவோ அல்லது வேறு எந்த அமைச்சராகவோ தொடர முடியும்.

இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி.

கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா சிறிய அளவில் நடைபெற உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே கூறியிருந்தார்.

முன்னதாக, நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. அதனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. இதையடுத்து நீதிமன்றம் செல்ல மம்தா முடிவு எடுத்துள்ளார்.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 3 மே 2021