மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஆக்சிஜன் பற்றாக்குறை: கர்நாடகாவில் 24 பேர் பலி!

ஆக்சிஜன் பற்றாக்குறை: கர்நாடகாவில் 24 பேர் பலி!

கர்நாடாகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கஷ்டப்படுகின்றனர். ஆக்சிஜன் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். வரிசையில் காத்திருந்தும் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம். இப்படி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பையும் மீள முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில்,” 12 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மற்றவர்கள் இணை நோய் காரணமாகவும் உயிரிழந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் துணை ஆணையர் எம்.ஆர்.ரவி கூறுகையில், “ இறந்த அனைவரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர் என்று கூற முடியாது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை 24 நோயாளிகள் இறந்துள்ளனர். 23 பேர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்” என கூறினார்.

”இதுகுறித்து விசாரணை நடத்தவும், ஆக்சிஜன் சப்ளை இல்லாததற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்” அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேட்டறிந்தார். மேலும், நாளை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கும் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கல்பூர்கியில் உள்ள கேபிஎன் மருத்துவமனையில் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

திங்கள் 3 மே 2021