மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா காரணமாக, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவமனைகளில் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொடிய தொற்றினால் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வேலை பார்க்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், தேவைக்கேற்ப அவ்வப்போது மாநில அரசுகள் மருத்துவர்கள், செவிலியர்களை பணி நியமனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மருத்துவ மாணவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள், லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைப்பேசியில் ஆலோசனை வழங்கவும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. கொரனோ சிகிச்சை பணியில் 100 நாள்கள் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

வினிதா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 3 மே 2021