மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஸ்டாலின் நாளை முதல்வராகத் தேர்வு!

ஸ்டாலின் நாளை முதல்வராகத் தேர்வு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றதை அடுத்து விரைவில் தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொள்ள இருக்கிறார்.

நேற்று (மே 2) நள்ளிரவு கலைஞர் நினைவிடத்தில் தனது வெற்றிச் சான்றிதழை வைத்து வணங்கிய ஸ்டாலினிடம், பதவிப் பிரமாணம் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் முழுமையாக சான்றிதழை பெறவில்லை. இன்று இரவு நாளை காலைதான் அது முடியும். வெற்றிச் சான்றிதழகளை பெற்ற பிறகு நாளை மறுநாள் மே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி முறையாக தலைவரை தேர்ந்தெடுத்து, அதன் பின் அரசு அதிகாரிகளை கலந்து பேசி பதவிப் பிரமாண நிகழ்வு பற்றி முடிவெடுக்கப்படும்”என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வெற்றிபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மே 3) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 4.5.2021 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

நாளை மாலை நடைபெறும் கூட்டத்தில் முறைப்படி மு.க.ஸ்டாலின் திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ஆளுநர் சந்திப்பு, அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு, அமைச்சரவை பதவியேற்பு ஆகிய நிகழ்வுகள் அணிவகுக்கும்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 3 மே 2021