மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ராஜினாமா செய்தவுடன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்

ராஜினாமா செய்தவுடன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பெரும்பான்மை இல்லாமல் தோல்வியை சந்தித்ததால், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து சென்னையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு விஜயநாராயணன் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் முதல்வர் பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்… மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்” என திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

திங்கள் 3 மே 2021