மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

'தவறை சரி செய்ய முயற்சியுங்கள்’: உச்ச நீதிமன்றம்!

'தவறை சரி செய்ய முயற்சியுங்கள்’: உச்ச நீதிமன்றம்!

உயர் நீதிமன்றங்களில் வாய்மொழியாக கூறப்படும் உத்தரவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. இதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதியலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை இன்று(மே 3) நீதிபதி ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி,” நீதிமன்றத்தின் வாய்வழி அவதானிப்புகளை ஊடகங்கள் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது எந்தவொரு குற்றப் புகாரும் பதிவு செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

”நீதிமன்றத்தில் நடக்கும் விவாதத்தை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று நாங்கள் கூற முடியாது. நீதிமன்றத்தில் நடைபெறும் கலந்துரையாடல் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவைப் போலவே பொது நலனுக்கானது. அதனால், அதை வெளியிட கூடாது என மறுக்க முடியாது. இதில், ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்த கண்காணிப்புக் குழுவாகும்” என நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். அதனால், அவர்களை சோர்வடைய செய்ய முடியாது. இந்த விஷயத்தில் உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கருத்துக்களை சரியான முறையில் எடுத்துகொள்ளுங்கள்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியல் சாசன அதிகாரம் அமைப்பு. எனவே, அதன் மீது மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் கொண்ட அமைப்பான உயர்நீதிமன்றம் கருத்து கூறக்கூடாது என சொல்லுகிறீர்களா?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை கூறுகிறார்கள் என்றால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால், அந்த தவறை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்” என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 3 மே 2021