மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

புதுச்சேரி முதல்வராக 7ஆம் தேதி ரெங்கசாமி பதவியேற்பு!

புதுச்சேரி முதல்வராக 7ஆம் தேதி ரெங்கசாமி பதவியேற்பு!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி இரண்டாவது முறையாக வருகிற 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

புதுச்சேரி - 23, காரைக்கால் -5, மாகே -1, ஏனாம் -1 என மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்தே என்.ஆர் காங்கிரஸ் தொடர்ந்து லீடிங்கில் இருந்து வந்தது. இந்நிலையில், என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதை எதிர்த்து களத்தில் இறங்கிய காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஏனாம், உருளையன்பேட்டை திருபுவனை, முத்தியால்பேட்டை , திருநள்ளார் மற்றும் உழவர் கரை ஆகிய 6 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ரெங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் ரெங்கசாமி வெற்றி பெற்றார். ஆனால், ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில், சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றுள்ளார்.

போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. என்.ஆர் காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, தங்களுக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாகவும், அதற்கு என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி வருகிற மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

என்.ஆர்.காங்கிரஸ்:

1. தேனீ.ஜெயக்குமார் - மங்கலம்

2. கே.எஸ்.பி. ரமேஷ் – கதிர்காமம்

3. லட்சுமிகாந்தன் – ஏம்பலம்

4. ராஜவேலு – நெட்டப்பாக்கம்

5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் - அரியாங்குப்பம்

6. ஏ.கே.டிஆறுமுகம் - இந்திரா நகர்

7. ரங்கசாமி - தட்டாஞ்சாவடி

8. சந்திரபிரியங்கா - நெடுங்காடு

9. பி.ஆர்.என்.திருமுருகன் - காரைக்கால் வடக்கு

10. லட்சுமி நாராயணன் - ராஜ்பவன்

பாஜக:

1. ஜான்குமார் - காமராஜ் நகர்

2. ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லி தோப்பு

3. நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு

4. கல்யாண சுந்தரம் - காலாப்பட்டு

5. ஏம்பலம் செல்வம் – மணவெளி

6. சாய் ஜெ.சரவணன் - ஊசுடு

காங்கிரஸ்:

1. வைத்தியநாதன் - லாஸ்பேட்டை

2. ரமேஷ் பரம்பத் - மாஹி

திமுக:

1. அனிபால் கென்னடி – உப்பளம்

2. சிவா - வில்லியனூர்

3. நாஜிம் - காரைக்கால் தெற்கு

4. சம்பத் - முதலியார் பேட்டை

5. நாக தியாகராஜன் - நிரவி பட்டினம்.

6.செந்தில் – பாகூர்

சுயேட்சை வேட்பாளர்கள்

1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் - ஏனாம்

2. நேரு - உருளையன்பேட்டை

3. பிரகாஷ் குமார் - முத்தியால்பேட்டை

4. அங்காளன் - திருபுவனை

5. சிவா - திருநள்ளாறு

6. சிவசங்கரன் - உழவர்கரை

காசி, வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 3 மே 2021