மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

முழு ஊரடங்கை அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

முழு ஊரடங்கை அமல்படுத்த பரிசீலிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

மத்திய, மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால் கட்டாயம் ஊரடங்கு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. நேற்று (மே 2) நடந்த விசாரணையின்போது மத்திய, மாநில அரசுகளுக்குப் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

டெல்லியில் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் இணைந்து கொடிய கொரோனா தொற்றுள்ள அவசர காலத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாநிலங்கள் போதிய அளவு ஆக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்வதற்கு, 4 நாட்களில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் யாருக்கும் அத்தியாவசிய மருந்துகள் மறுக்கப்படக் கூடாது. இதற்காக 2 வாரங்களுக்குள் மாநில அரசுகளுக்கான தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

அடுத்த விசாரணைக்குள் ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை போன்றவை மறு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் சூப்பர் ஸ்பீடு வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டும், கொரோனா என்ற சங்கிலியை உடைக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

அதேநேரம் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனில், அதை சமாளிக்க முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வினிதா

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

5 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

7 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

7 நிமிட வாசிப்பு

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

திங்கள் 3 மே 2021