மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

வெற்றி.. தோல்வி.. மம்தா கேள்வி?

வெற்றி.. தோல்வி.. மம்தா கேள்வி?

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாலை 4.20 மணி நிலவரப்படி 1201 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி ஊடகங்கள், மற்ற வட இந்திய ஊடகங்கள், அயல்நாட்டு ஊடகங்கள், கன்னியாகுமரிவரை பார்க்கப்படும், கேட்கப்படும் அனைத்து ஊடகங்களிலும் உடனடியாக நேரலைச் செய்தியாகவும் வெளியிடப்பட்டது.

மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி உறுதியாகியும் அவரின் வெற்றி உறுதியாகாமல் இழுபறி ஒரு முடிவுக்கு வந்ததே என திரிணமூல் கட்சியினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது இரண்டு மணி நேரத்துக்குகூட நீடிக்கவில்லை.

6.30 மணியளவில் அதே தொகுதியில் மம்தாவின் போட்டி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு வித்தியாசமும் 1900 என அறிவிக்கப்பட்டது.

திடீர் அறிவிப்பு மாற்றத்தால் மம்தாவின் திரிணமூல் கட்சியினர் கொந்தளிப்பாகினர்.

பாஜக அலுவலகத்தின் மீது திரிணமூல் கட்சியினர் தீ வைத்து எரித்த சம்பவமும் அரங்கேறியது.

மம்தா கட்சித் தலைமையின் பெயரில், மாலை 6.35 மணிக்கு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை. யாரும் ஊகமாக எதையும் கருதிக்கொள்ள வேண்டாம்.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்துப் பேசிய மம்தா, மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 2 மே 2021