மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

கமலை பின்னுக்குத் தள்ளிய வானதி சீனிவாசன்

கமலை பின்னுக்குத் தள்ளிய வானதி சீனிவாசன்

காலையிலிருந்து முன்னிலையில் இருந்து வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பின்னுக்குத் தள்ளி வானதி சீனிவாசன் முன்னுக்கு வந்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிட்டார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியின்காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர். இருப்பினும், கமலுக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

காலையில், கமல் ஹாசன் முதல் இடத்திலும் மயூரா ஜெயக்குமார் இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தனர். இதையடுத்து,மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

23வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, 890 வாக்குகள் அதிகம் பெற்று கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளியுள்ளார் வானதி சீனிவாசன். வானதி சீனிவாசன் 45,932 வாக்குகளும், கமல் ஹாசன் 45,042 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

குறைந்த அளவே வாக்கு வித்தியாசம் உள்ளதால், இறுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 2 மே 2021