மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த பரிசு!

மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த பரிசு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை பரிசாக அளித்துள்ள புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததை சுட்டிக்காட்டி செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தது நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசு ஒன்று அளித்தார்.

இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், எய்ம்ஸ் என எழுதப்பட்டுள்ள செங்கல்லை மு.க.ஸ்டாலினுக்குப் பரிசாக வழங்கி உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். அருகில் உதயநிதியின் மகன் இன்பா உதயநிதி, உள்ளிட்ட மு.க.ஸ்டாலினின் பேரன், பேத்திகள் உடனிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 2 மே 2021