மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

ஆட்டம்காட்டிய 6 வித்தியாசம்.. கடைசியில் உறுதியான மம்தாவின் வெற்றி!

ஆட்டம்காட்டிய 6 வித்தியாசம்.. கடைசியில் உறுதியான மம்தாவின் வெற்றி!

மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி மதியமே உறுதியானது. ஆனால் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தோல்வியடையலாம் என்கிறபடிதான் வாக்கு எண்ணிக்கை காட்டியது.

அஞ்சல் வாக்குகளைக் கொண்ட முதல் சுற்றிலிருந்து நண்பகல்வரை, கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு பின்னடைவாகத்தான் இருந்தது. அவரின் முன்னாள் அமைச்சரவை சகாவும் தளபதியும் இன்னாள் போட்டி வேட்பாளருமான பாஜகவின் சுவேந்து அதிகாரியே முன்னிலை வகித்தார்.

பிற்பகல் 2.24 மணியளவில் 12ஆவது சுற்றில் 4,500 வாக்குகள் குறைவாகப் பெற்று பின் தங்கியே இருந்தார், மம்தா.

2.56 மணிக்கு, 14ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 2, 331 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னேறினார், மம்தா.

3.12 மணிக்கு 15 ஆவது சுற்று முடியும்போது, 8,500 வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

3:31 மணிக்கு 16ஆவது சுற்றில் நிலைமை மாறியது. பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னே போனார். ஆனால், வாக்கு வித்தியாசம் வெறும் 6 வாக்குகளே!

3:37 மணிக்கு 18 ஆவது சுற்று முடிந்தபோதும் அதே 6 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னால்தான் இருந்தார், மம்தா.

அடுத்து ஒரே சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்படவிருந்தன.

3:56 மணிக்கு அடுத்த சுற்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. சிறிது நேரத்தில் 600 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னே சென்றார், மம்தா.

அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபோது, 1, 201 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார், மம்தா.

இந்த வெற்றியைப் பெறுவதற்கு மம்தா மிகத் தீவிரமாக வேலைசெய்தார். மார்ச் முதல் வாரம் நந்திகிராமில் பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து வாக்குப்பதிவு நாள்வரை, அவருடைய களப்பணியை பிற கட்சிகளின் தலைவர்கள் செய்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கவில்லை, மம்தா. சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார்கள் என புகார்கள் வர, உடனே வண்டியைக் கிளப்பச் சொல்லி, சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்றார். சக்கர நாற்காலியிலேயே பல சாவடிகளுக்கும் சென்ற அவர், நல்ல வெயில் நேரத்தில் பழைய பள்ளிக் கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் நடப்பதை என்ன எனக் கேட்டார். அந்த இடத்திலேயே முகாமிட்டவர் அங்கிருந்தபடியே ஆளுநருக்கு போன் போட்டு புகார் கூறியதெல்லாம் நினைவிருக்கலாம்.

பாலசிங்கம்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 2 மே 2021