மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

மீண்டும் இடதுசாரி மீது மக்கள் நம்பிக்கை!

மீண்டும் இடதுசாரி மீது மக்கள் நம்பிக்கை!

கேரளாவில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது.

தற்போதைய நிலவரப்படி, 94 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , மற்றவை 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பாஜக எந்த இடத்திலும் வரவில்லை.

ஆட்சியமைக்க 71 இடங்களில் வெற்றிபெற்றால் போதும் என்ற நிலையில் இடதுசாரி கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

”கேரள மக்கள் மீண்டும் இடதுசாரி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் இது கோவிட் -19 பெருமளவில் பரவுவதால் கொண்டாட வேண்டிய நேரம் அல்ல. கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடர வேண்டும்" முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

”இரண்டாவது முறை ஆட்சிக்கு செல்ல தயாராக உள்ளோம். எங்கள் முதல்வரின் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளில் கேரளா இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளது. மீண்டும் நாங்கள் அலுவலகத்திற்கு செல்வோம் என்பதில் உறுதியாக இருந்தோம். அடுத்த சுகாதார அமைச்சர் யார் என்பதை கட்சி தீர்மானிக்கும்” என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 2 மே 2021