மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

ஒரே எண்ணில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

ஒரே எண்ணில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

மதுரை, திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் திமுக சார்பில் மணிமாறன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் காலை முதல் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருமங்கலம் தொகுதி செங்கப்பட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 132 என்ற எண் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான 760 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில்,மற்றொரு இயந்திரத்திலும் 132 என்ற எண் இருந்ததால்,வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அந்தத் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று, தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் சிக்கல் ஏற்பட்டது.

வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 2 மே 2021