மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

வெற்றியை சமர்ப்பிக்க, அலங்கரிக்கப்படும் கலைஞர் நினைவிடம்!

வெற்றியை சமர்ப்பிக்க, அலங்கரிக்கப்படும் கலைஞர் நினைவிடம்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கத் தயாராகும் நிலையில்... சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 153 இடங்களில், அதாவது பெரும்பான்மை எல்லையைத் தாண்டி, வெற்றியை நிலை நாட்டி வருகிறது. இதன்மூலம் திமுக வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால், ஸ்டாலினுக்கு வாழ்த்து மழை பொழிகிறது. ’#மு.க.ஸ்டாலின்எனும்நான்’ #dmkwinsTN என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்களால் கலைஞர் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு 4.30-6 மணி வரை ராகு காலம். அதனால், மாலை 6 மணிக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி மற்றும் சில திமுக பிரமுகர்களுடன் கலைஞர் நினைவிடம் சென்று, பெரும்பான்மை வெற்றியை சமர்ப்பிக்க இருக்கிறார்.

இன்றைக்கு காலையில் 11.30 மணியளவில் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி, வைரமுத்து ஆகியோர் நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

காசி, வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 2 மே 2021