மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

தேர்தல் வியூகம்: விலகும் பிரசாந்த் கிஷோர் -ஏன்?

தேர்தல்  வியூகம்: விலகும் பிரசாந்த் கிஷோர் -ஏன்?

தமிழகத்தில் திமுக, மேற்கு வங்காளத்தில் திருணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர்...தான் பணியாற்றிய கட்சிகள் இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், ‘தேர்தல் உத்திவகுப்பு தொழிலில் இருந்து விலகுவதாக இன்று (மே 2) அறிவித்திருக்கிறார்.

ஆங்கில ஊடகங்களுடன் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பிரத்யேகமாகப் பேசிய அவர், "நான் நீண்ட காலமாகவே இந்த துறையில் இருந்து விலகுவதைப் பற்றி யோசித்து வருகிறேன், ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன். மேற்கு வங்காளம் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தது" என்றார்.

ஏற்கனவே ரிபப்ளிக் டிவி சேனலில் தேர்தல் முடிவுக்கு முன் பிரசாந்த் கொடுத்த பேட்டியில், மேற்கு வங்காளத்தில் பாஜக 100 தொகுதிகளைக் கடந்துவிட்டால் தான் இந்த துறையில் இருந்தே விலகுவதாக சவால் விட்டிருந்தார். ஆனால் மேற்கு வங்காளத் தேர்தலில் பாஜக 100க்கும் குறைவான இடங்களிலேயே (80) வெற்றி பெறும் நிலை இருந்தபோதும் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

’நான் இந்த துறையில் போதும் போதும் என்ற அளவுக்கு சாதித்துவிட்டேன். இதற்கு மேல் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணிபுரிய விரும்பவில்லை”என்று கூறினார். மேலும் அவரது நிறுவனமான ஐபேக் நிறுவனத்தை தனது சக நிர்வாகிகள் நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர் பின் அதிலிருந்து விலகினார். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்ட நிலையில் அதை மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை பிரசாந்த் கிஷோர்.

மேற்கு வங்காளத்தில் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு போன திருணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளை அழுகிய முட்டைகள் என்று வர்ணித்த பிரசாந்த் கிஷோர், அவர்களால் திருணமூல் கட்சி தூய்மை அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

.

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 2 மே 2021