மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

துரைமுருகன்-வீரமணி பின்னடைவு: பூமராங் ஆன தேர்தல் பிளான்!

துரைமுருகன்-வீரமணி பின்னடைவு: பூமராங்  ஆன தேர்தல் பிளான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்பார்ப்புக்குரிய முக்கியப் பிரமுகர்களின் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டுள்ளன.

அந்த வகையில் திமுகவின் மிக மூத்த பிரமுகரும் மிக மூத்த சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது காட்பாடி தொகுதியில் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் 12 ஆவது முறையும் காட்பாடி தொகுதியில் பத்தாவது முறையாகவும் போட்டியிடும் துரைமுருகன்... மதியம் 2 மணி நிலவரப்படி காட்பாடி தொகுதியின் 53 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 45 ஆயிரத்து 640 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமு சுமார் 3 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று 48 ஆயிரத்து 189 வாக்குகளையும் பெற்றுள்ளார். இந்த இடைவெளி தொடரும் பட்சத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பற்றியும் கேள்விக்குறியான நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி காட்பாடி திமுகவினரிடம் பேசியபோது..."வன்னியர் பகுதிகளில் துரைமுருகனுக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. முதலியார் ஓட்டுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் இது சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதேபோல மதியம் 2.30 நிலவரப்படி பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் விருதம்பட்டு பகுதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் துரைமுருகன் 700 ஓட்டுகள் அதிகம் பெற்றிருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

இதேபோல அமைச்சர் வீரமணி ஜோலார் பேட்டையில் பின்னடைவை சந்தித்து வருகிறார். இன்று பிற்பகல் 2.30 நிலவரப்படி அமைச்சர் வீரமணி 59 158 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் தேவராஜி 61 ஆயிரத்து 389 வாக்குகள் பெற்றுள்ளார்.

துரைமுருகன், வீரமணி ஆகிய இருவருமே இம்மாவட்டங்களின் முக்கிய விஐபிகள். இவர்களின் நிலை பற்றி திமுக, அதிமுக இரு தரப்புப் பிரமுகர்களிடம் பேசும்போது,

“துரைமுருகனுக்கும் வீரமணிக்கும் நல்ல நெருக்கம் உண்டு. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும்.எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகனுக்கு எதிராக பலவீனமாக வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்காக வெளியூரில் இருந்து ராமுவை கொண்டு போய் நிறுத்தினார் வீரமணி. அதேபோல வீரமணிக்கு எதிராக பலவீனமாக வேட்பாளரை நிறுத்தி அவரை ஜெயிக்க வேண்டும் என முடிவு செய்துதான் அமைச்சருக்கு எதிரான தேவராஜியை நிறுத்தினார் துரைமுருகன்.

ஆனால் யாரை பலவீனம் என்று இருவரும் நினைத்தார்களோ, அவர்களே இப்போது பலமாக மாறி இரு பெரும் புள்ளிகளையும் திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்” என்று சிரிக்கிறார்கள்.

-வேந்தன்

.

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 2 மே 2021