மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

1 மணி நிலவரம்: ஆட்சியை நோக்கி திமுக...கௌரவமாய் அதிமுக

1 மணி நிலவரம்: ஆட்சியை நோக்கி திமுக...கௌரவமாய் அதிமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே2) காலை 8.30க்கு தொடங்கப்பட்ட நிலையில், ஐந்து ரவுண்டுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் இன்று பகல் ஒரு மணி நேர நிலவரப்படி, திமுக கூட்டணி 146 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மண்டல வாரியாக பார்த்தால் சென்னை மண்டலத்தை திமுக சூறையாடியிருக்கிறது. சென்னை மண்டலத்திலுள்ள தொகுதிகளில் 33 இல் திமுகவும், 4 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் இருக்கின்றன.

வடக்கு மண்டலத்தில் பாமகவின் துணையோடு அதிமுக திமுகவோடு சமபலத்தில் நிற்கிறது. அதிமுக கூட்டணி 16இடங்களிலும் திமுக கூட்டணி 16 இடங்களிலும் இங்கே முன்னிலை வகிக்கின்றன.

மத்திய மாவட்டங்களில் திமுக 22 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுகவுக்கு பெருமளவில் கைகொடுத்துள்ளது. இங்கே திமுக கூட்டணி 14 தொகுதிகளிலும், 35 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.

இதற்கு மாறாக டெல்டா மண்டலம் 13 ஐ திமுகவுக்கும் 5ஐ அதிமுகவுக்கும் கொடுத்துள்ளது.

தென் மாவட்டங்களில் திமுக 33 தொகுதிகளிலும் அதிமுக 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

அதிமுகவுக்கு இந்த கௌரவத்தை அளித்திருப்பதில் கொங்கு முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 2 மே 2021