மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

தொகுதியில் பின்தங்கிய மம்தா, முன்னிலையில் திரிணமூல் கட்சி!

தொகுதியில் பின்தங்கிய மம்தா, முன்னிலையில் திரிணமூல் கட்சி!

எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற மேற்குவங்க மாநிலத்திலும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அஞ்சல் வாக்குகள் அடங்கிய முதல் சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் கட்சியே முன்னிலை வகித்தது. 9 மணி நிலவரத்தை முன்னதாகப் பதிவுசெய்திருந்தோம்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலுக்கும் தேர்தல் ஆணையத்தின் தகவலுக்கும் பெரிய இடைவெளி இருந்துவருகிறது. உள்ளூரில் உறுதிசெய்யப்பட்ட முன்னிலை தெரிந்த தொகுதிகளின் எண்ணிக்கை 148ஆக இருந்தபோது, தேர்தல் ஆணையம் 75 தொகுதிகளின் நிலவரத்தையே வெளியிட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கைப் பணியும் அதை உரிய முறைப்படி தேர்தல் ஆணையத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியானது, மின்னணு தகவல்தொடர்பு வளர்ச்சியின் நவீன காலகட்டமான இப்போதும் பழைய காலத்து மந்தகதியிலேயே நடக்கிறது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டு இடங்களில் வேட்பாளர்கள் இறந்துவிட்டதால், மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் இன்று நடைபெறுகிறது.

இன்று 12.30 மணி நிலவரப்படி 292 தொகுதிகளில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களிலும் பாஜக கூட்டணி 92 தொகுதிகளிலும் இடதுசாரி+காங்கிரஸ் அணி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

கிழக்கு மித்னாப்பூர் மாவட்டம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியைவிட அவரை எதிர்த்து பாஜகவின் சார்பில் போட்டியிட்ட அவரின் முன்னாள் அமைச்சரவை சகா சுபேந்து அதிகாரி முன்னிலையில் இருக்கிறார்.

ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில், மம்தா பானர்ஜி, 30,655 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், சுபேந்து அதிகாரி , 34,430 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளார்.

ஆனாலும் வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் திரிணமூல் கட்சியின் தலைவர் வெற்றி பெற்றுவிடுவார் என நம்பிக்கையோடு கூறுகிறார், இப்போதைய அமைச்சரான சோபன் தேவ் சட்டர்ஜி.

இவருக்காகத்தான் தன்னுடைய பவானிப்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு, நந்திகிராம் தொகுதிக்கு மாறினார், மம்தா. இங்கு திரிணமூல் கட்சியே 10, 448 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 2 மே 2021