மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

இடதுசாரி மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகிறதா?

இடதுசாரி மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகிறதா?

கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

கேரளாவில் தபால் வாக்குகளைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், இடதுசாரி கட்சியே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஒருவேளை இடதுசாரிகள் வென்றால், திங்கள்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனும், மட்டன்னூர் தொகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

இடதுசாரிகள் கூட்டணி 89 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

-வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 2 மே 2021