மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

எச்சரிக்கையை மீறி அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்!

எச்சரிக்கையை மீறி அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்!

தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு மத்தியில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது, ஊர்வலமாக செல்லக் கூடாது, இனிப்பு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குகள் வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “ வீதிகள் வெறிச்சோடட்டும், வீட்டிற்குள் இருந்தே வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் செய்திகள் வெளியாவதை பார்த்த திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கான சுடர் தென்பட்டுள்ளது. இதனால், சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே குவிந்த திமுக தொண்டர்கள், திமுக வெற்றி பெற போகிறது என்று பட்டாசுகளை வெடித்தும், மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் ”ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தர போறாரு” என்ற பாடலுடன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 2 மே 2021