மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டுள்ளன. தற்போது வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

காமராஜ் நகர், நெல்லி தோப்பு, மண்ணாடிப்பட்டு ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களும், கதிர்காமம், மங்கலம், ஏனாம், காரைக்கால் வடக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நெடுங்காடு, உருளையன்பேட்டை தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், மாஹி, லாஸ்பேட்டை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 2 மே 2021