மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

சென்னையை சுற்றி வளைக்கும் திமுக

சென்னையை சுற்றி வளைக்கும் திமுக

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில்... முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை சென்னை மாநகரத்தின் பெரும்பாலான தொகுதிகளில முடிந்திருக்கிறது.

சென்னை மாநகரத்தில் இருக்கும் தொகுதிகளில் பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில்...‌. இந்த தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது.

ஆர்கே நகர், வில்லிவாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில் அங்கும் திமுக முன்னிலையில் இருக்கிறது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 15 தொகுதிகளில் திமுக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பில் சென்னை மண்டலத்தை திமுக முழுமையாக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் ரவுண்டில் திமுக சென்னையை முற்றுகையிட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் தான் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 2 மே 2021