மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

தபால் ஓட்டு முடிந்தது: முதல் ரவுண்டு தொடங்கியது- திமுக முன்னிலை!

தபால் ஓட்டு முடிந்தது:  முதல் ரவுண்டு தொடங்கியது-  திமுக முன்னிலை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை தொடங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குறைவான தபால் ஓட்டுகள் பதிவான தொகுதிகளில் 8.30க்கே எண்ணிமுடிக்கப்பட்டது. திருவள்ளூர் போன்ற தொகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் உள்ளன. இதுபோன்ற தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கை 9 மணியைத் தாண்டியும் தொடர்கிறது. தபால் ஓட்டுகள் முடிந்த நிலையில் 8.30க்கு பல தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.

தபால் ஓட்டுகளைப் பொறுத்தவரை விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தை விட திமுக வேட்பாளர் லட்சுமணன் 339 வாக்குகள் வித்தியாசம் பெற்றிருக்கிறார். கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பன் 3,175 ஓட்டு, எம்.சி.சம்பத் 4436 என்ற அளவில் இருக்கின்றனர்.

தபால் ஓட்டுகளில் திமுக பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முதல் ரவுண்டிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

முதல் ரவுண்டு தொடங்கிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட சுமார் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

திமுக பல தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

-வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 2 மே 2021