மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

அதிகாலையிலேயே குவிந்த வேட்பாளர்கள்: தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

அதிகாலையிலேயே குவிந்த வேட்பாளர்கள்: தொடங்குகிறது  வாக்கு எண்ணிக்கை!

அடுத்த ஐந்து ஆணடுகள் தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான பதில், இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை தொடங்குகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக இருந்தாலும் வேட்பாளர்கள் காலை 5 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக திமுக வேட்பாளர்கள் காலை 5 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்றுவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் காலை 5.15 மணியில் இருந்து 5.30 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்றுவிட்டனர். 5.30 மணிக்கு தலைமை முகவர்கள் உள்ளிட்ட முகவர்களும் சென்றுவிட்டனர். அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பது சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள்.

காலை 6 மணிக்கு ஸ்ட்ராங் ரூம் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பும்போது அந்த கன் ட்ரோல் யூனிட்டுகளின் மீது சுற்றப்பட்ட பிங்க் பேப்பர் ஸ்லிப் எனப்படும் பட்டையில் அனைத்து முகவர்கள் கையெழுத்து, பதிவான வாக்கு எண்ணிக்கை விவரம் எல்லாம் இருக்கும். அவை இப்போதும் சரியாக இருக்கிறதா என்று வேட்பாளர்களும் முகவர்களும் சரிபார்க்கிறார்கள்.

இந்த வெரிபிரிகேஷன்கள் முடிந்து காலை 8 மணியளவிலேயே முதலில் தபால் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் என்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 டேபிள்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில தொகுதிகளில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகளை எப்போதும் ஒரு தொகுதிக்கு ஒருவர்தான் எண்ணுவார். அதனால் தபால் ஓட்டு எண்ணிக்கையில் தாமதமும் முறைகேடும் நடப்பதாக சொல்லி அதை அதிகம் பேர் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி இந்தத் தேர்தலில் தபால் ஓட்டுகளை தனி டேபிள் போட்டு ஒரு தொகுதிக்கு நான்கு பேர் எண்ணுகிறார்கள். தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ண ஆரம்பிக்கப்படும். தபால் ஓட்டுகள் கடந்த முறைகளை விட இந்த முறை விரைவாகவும் சிக்கல் இன்றியும் எண்ணப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள்.

எனவே தபால் ஓட்டுகளின் நிலவரம் தெரியவரவே எட்டு மணிக்கு மேலாகும். அதன் பின் 8.30 மணியளவில்தான் மின்னணு இயந்திரங்களில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும்.

-வணங்காமுடிவேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

ஞாயிறு 2 மே 2021