மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

‘ஆணையத்தின் மீது கொலை வழக்கு’: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

‘ஆணையத்தின் மீது கொலை வழக்கு’: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

‘தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதியலாம்’ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “கரூரில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும்போது, 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும். அதனால், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏப்ரல் 26ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, “கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைய தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. தேர்தல் பரப்புரை நடந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?” என நீதிபதிகள் கடுமையாக பேசினர்.

இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தேர்தல் ஆணையம், நீதிமன்ற விசாரணையின்போது, வாய்வார்த்தையாகக் கூறுவதை செய்தியாக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என்று வாய்மொழியாக உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாகக் கட்டிக்காத்து வந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நேற்று (மே 1) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சுயாதீன அரசியலமைப்பு அதிகாரமாக இருந்துகொண்டு, எந்தவோர் அடிப்படையுமின்றி மற்றொரு சுயாதீன அரசியலமைப்பு அதிகாரத்தின் மீது கொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் மட்டுமே பொறுப்பு. அதனால், தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (மே 3) காலை 10.30 மணியளவில் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 2 மே 2021